விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான மகரிஷி படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்க உள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் அதிதி ராவ் இருவரும் கதாநாயகியாக நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது
தற்போது இந்த படத்திற்கு 'சரிலேறு நீக்கெவரு' டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. உன்னுடன் சரிக்கு சரியாக மோதும் ஆள் யார் இருக்கா என்பதுதான் இதற்கு அர்த்தம்.. பொதுவாக நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளை விட தனது தந்தையின் பிறந்தநாளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார். அந்த வகையில் நேற்று அவரது பிறந்த நாள் பரிசாக தனது படத்தின் புதிய டைட்டிலை வெளியிட்டுள்ளார் மகேஷ்பாபு
மேலும் தனது முந்தாய் பாடமான மகரிஷி ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப்போனதால் இந்தமுறை சங்கராந்திக்கு இந்தப்படம் வெளியாகும் என்றும் போஸ்டரிலேயே அறிவித்துவிட்டார் மகேஷ் பாபு. இந்த படத்தில் மூன்று தயாரிப்பாளர்களில் மகேஷ்பாபுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.