பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
பிரேமம் படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற மூன்று கதாநாயகிகளில் அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். மற்ற இரண்டு நடிகைகளும் தமிழ் மலையாளம் ஆகியவற்றில் தற்போது கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர். ஆனால் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்தவர் கடந்த இரண்டு வருடங்களாக தெலுங்கு திரையுலகிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.
இந்த நிலையில் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் அனுபமா. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபல நகைச்சுவை நடிகர் ஜேக்கப் கிரிகோரி என்பவர் நடித்தாலும், கதையின் மீதும் தனது கதாபாத்திரத்தின் மீதும் ரொம்பவே ஈர்க்கப்பட்டுத்தான், இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் அனுபமா.
அதன் வெளிப்பாடாகத்தான் தற்போது படப்பிடிப்பில் தனது காட்சிகளில் நடித்தது போக, மீதியுள்ள ஓய்வு நேரத்தில் படத்தின் அறிமுக இயக்குனர் சம்சு சைபாவுக்கு உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். தனது படத்தில் இவரது அர்ப்பணிப்பு உணர்வை பார்த்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் சல்மான்.