பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
தமிழில் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டிக்கு அடியாளாக நடித்து புகழ் பெற்றவர் மலையாள நடிகர் விநாயகன். தற்போது மலையாளத்தில் வில்லனாகவும் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்
இந்நிலையில் அன்வர் ரஷீத் டைரக்சனில் பஹத் பாசில் நடித்து வரும் ட்ரான்ஸ் என்கிற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைக்க இருக்கிறார் விநாயகன்.
இவர் இப்படி இசையமைப்பது புதிதல்ல. சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கம்மட்டி பாடம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்ததுடன் அதில் இடம்பெற்ற புழு புலிகள் என்கிற பாடலுக்கும் விநாயகன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.