பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற ஆட்சியைப் பிடித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, நாளை(மே 30) விஜயவாடாவில் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவிற்கு பலருக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டு வருகிறது.
தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான சிரஞ்சீவிக்கு ஜெகன்மோகன் தனிப்பட்ட அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அழைப்பு ஆந்திர அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் அவரது கட்சியான ஜனசேனா கட்சி மூலம் ஆந்திர தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
இருப்பினும் ஜெகன் விடுத்துள்ள அழைப்பை ஏற்று நாளை ஆந்திராவில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா என்பது இன்னும் சந்தேகமாக உள்ளது. தற்போது அரசியலிலிருந்தே விலகியுள்ள சிரஞ்சீவி, பொதுவான ஒருவராக கலந்து கொள்வதில் தப்பில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.