ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
பார்வதி நடிப்பில் மலையாளத்தில் உயரே என்கிற படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த பார்வதிக்கு பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு விமான பைலட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்வதி.
இந்த படத்தை சமீபத்தில் கேரளாவின் சுகாதார, சமூக நீதி மற்றும் பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கேகே.சைலஜா பார்த்தார். படத்தைப் பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டிய அவர், இந்த படம் சமூக விழிப்புணர்வு படமாக உருவாகி இருக்கிறது என்றும், இந்த படம் பெருவாரியான மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, இந்த படத்தை அரசு காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடுவதற்கு தான் ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.