தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
மகேஷ்பாபு நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் மகிரிஷி. தில் ராசு தயாரித்துள்ள இந்தப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்தில் முடிவடையாததால் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் தற்போது ஒருவழியாக வரும் மே-9ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இதையடுத்து இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே-1ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பீப்புள் பிளாசாவில் நடைபெற உள்ளது. இது மகேஷ்பாபுவின் 25வது படம் என்பதால் இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஜூனியர் என் டி.ஆரும், ராம்சரணும் கலந்துகொள்ள இருக்கிறார்களாம். மகேஷ்பாபுவின் முந்திய படமான பரத் ஆனே நேனு என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் இவர்கள் இருவரும் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.