ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
தமிழ்ப் படங்களைப் போல தெலுங்குப் படங்கள் இன்னும் யு டியுபில் சாதனைகளைப் படைக்க ஆரம்பிக்கவில்லை. இங்குதான் டீசர், டிரைலர் வெளியான சில மணி நேரங்களுக்குள் பல லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனையைப் படைக்கின்றன. தென்னிந்திய அளவில் பல சாதனைகளை தமிழ்ப் படங்கள்தான் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
கார்த்தி நடித்த 'தோழா' படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'மகரிஷி' படத்தின் டீசரை உகாதிப் பண்டிகையை முன்னிட்டு நேற்று யு டியுபில் காலை வெளியிட்டார்கள். வெளியான 12 மணி நேரங்களுக்குள் அந்த டீசர் 1 கோடி பார்வைகளைக் கடந்து தெலுங்குத் திரையுலகத்தில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன்பு மகேஷ் பாபு நடித்து வெளிவந்த 'பரத் அனி நேனு' படத்தின் டீசர் 24 மணி நேரங்களுக்குள் 90 லட்சம் பார்வைகளைப் பெற்றிருந்த சாதனையை இந்த 'மகரிஷி' டீசர் முறியடித்துள்ளது. 'மகரிஷி' படத்தை மே 9ம் தேதி வெளியிட உள்ளார்கள்.