அட்லீ - பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | கடைசி கட்ட ஓட்டத்தில் 'வாரிசு, துணிவு' | விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் - அடுத்தடுத்து வந்த அப்டேட்கள் | ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை | திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல் | குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் | அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு | திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் |
தமிழ் நாட்டைச் சேர்ந்த ரெஜினா, தெலுங்கின் முன்னணி நடிகை. தமிழில் சமீபத்தில் சிலுக்குவார்பட்டி சிங்கம், மிஸ்டர் சந்திரமவுலி படங்களில் நடித்தார். நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, கள்ளபார்ட் படங்களில் நடித்து வருகிறார்.
ரெஜினா தெலுங்கில் பில்லா நேவு லீனி ஜீவிதம், சுப்பிரமணியம் பார் சேல் உள்ளிட்ட சில படங்களில் சாய் தரம் தேஜ் உடன் நடித்தார். தற்போது இருவரும் தீவிரமாக காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதை மறுத்து ரெஜினா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத செய்திகள் என்னை பற்றி வருவது மிகுந்த வருத்தத்தை தருகிறது. நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் இப்போது காதலிப்பது என் சினிமாவை மட்டும்தான். எனது கேரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனது காதலும், கல்யாணமும் ஒருபோதும் ரகசியமானதல்ல. நேரம் வரும்போது அதை நானே வெளிப்படையாக சொல்வேன். அதுவரை வதந்தி பரப்பாதீர்கள். என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.