இளையராஜா இசையில் பாட மறுத்த 'விடுதலை' நடிகை | ஜூனியர் என்டிஆர் படத்திற்கு ஹாலிவுட் கிராபிக்ஸ் நிபுணர் | ஜூனியர் என்டிஆர் படத்திற்கு ஹாலிவுட் கிராபிக்ஸ் நிபுணர் | 'ஆதி புருஷ்' வெற்றிக்கு வைஷ்ணவி தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு | இந்து கடவுள் அவமதிப்பு: டாப்ஸி மீது போலீசில் புகார் | தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைப்பு | தயாரிப்பாளர் சங்கத்திற்கு லைகா 50 லட்சம் நன்கொடை | ஹுசைன் மீது எப்படி காதல் வந்தது? மணிமேகலையின் லவ் ஸ்டோரி | பிக்பாஸ் அபிநய் மனைவி அபர்ணா மீது லட்ச கணக்கில் மோசடி புகார் | கோலாகலமாக நடந்த வளைகாப்பு : மகிழ்ச்சியில் கண்மணி - நவீன் |
மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பிருத்விராஜ் தற்போது லூசிபர் என்கிற படத்தின் மூலமாக இயக்குனராக மாறியுள்ளார். மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர். விவேக் ஓபராய். டொவினோ தாமஸ், இந்திரஜித் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
நேற்று முன்தினம் இருந்து இந்த படத்தின் கதாபாத்திரங்கள் தினசரி ஒவ்வொருவருடைய போஸ்டராக தொடர்ந்து 26 நாளைக்கு வெளியிடப்படும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார்.. அப்படி இரண்டு நாட்கள் வெளியிடப்பட்ட நிலையில் நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது லூசிபர் போன்ற படத்திற்கு புரமோஷன் செய்யும் விதமாக டிசைன்கள் வடிவமைப்பது ரொம்பவே கஷ்டமான ஒன்று.. ரசிகர்கள் தங்களது திறமையை பயன்படுத்தி தங்கள் மனதில் இந்தப்படத்தைப் பற்றி நினைத்து வைத்திருந்த கற்பனையை போஸ்டராக வடிவமைத்து அனுப்பலாம்.. அப்படி அனுப்பிய 10 நிமிடங்களில அவர்கள் வடிவமைத்த போஸ்டர்கள் ஆன்லைனில் பதிவேற்றப்படும் என ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.