வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை | மற்றுமொரு விவசாய படம் | நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி | ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! |
பவன் வாடியார் இயக்கத்தில் டி.இமான் இசையமைப்பில் புனித் ராஜ்குமார், ரட்சிதா ராம், அனுபவமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்துள்ள கன்னடப் படமான 'நடசார்வபௌமா' படம் கன்னடத் திரையுலக வெளியீட்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்தப் படம் பெங்களுரூவில் மட்டும் இன்று 550 காட்சிகள் திரையிடப்படுகிறது. இப்படத்தை கர்நாடகா முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் வெளியிட தியேட்டர்காரர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் 350 தியேட்டர்களில் மட்டும்தான் படத்தை வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளார்.
கன்னட சினிமாவில் பெரிய வெளியீடாக டிசம்பர் மாதம் வெளிவந்த 'கேஜிஎப்' படம் சாதனை புரிந்தது. அந்தப் படம் பெங்களுரூவில் முதல் நாளில் 525 காட்சிகளில் திரையிடப்பட்டது. அந்த சாதனையை தற்போது 550 காட்சிகளாக திரையிடப்பட்டதன் மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. சில தியேட்டர்களில் நேற்று இரவு முதலே காட்சிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
தமிழ் இசையைமப்பாளரான இமான், கன்னடத்தில் இசையமைத்துள்ள முதல் படம் இது. படத்திற்கு நல்ல விமர்சனமும் கிடைத்து வருவதால் இந்தப் படம் பெரிய வசூலைக் குவித்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புனித் நாயகனாக நடித்த 'அஞ்சானி புத்ரா' படம் வெளிவந்து ஒரு வருடத்திற்கு மேல் இடைவெளி ஆகிவிட்டதால் அவருடைய ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகிறார்களாம்.
படத்தைத் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டுள்ளார்களாம்.