சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகியுள்ள மணிகர்ணிகா படம், ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜான்சி ராணியாக நடித்துள்ள கங்கனாவிற்கு சமந்தா உள்ளிட்ட பல நடிகைகளும் பாராட்டி வருகிறார்கள். இந்த படத்தில் கங்கனா, இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இந்நிலையில், தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி, ஐதராபாத்திலுள்ள நடிகர் மகேஷ்பாபுவின் ஏஎம்பி திரையரங்கில் மணிகர்ணிகா படத்தை பார்த்திருக்கிறார். அதையடுத்து வெளியே வந்த சிரஞ்சீவியிடம் மீடியாக்கள் படம் குறித்து கேட்டபோது, மணிகர்ணிகா படத்தில் கங்கனா நடிப்பு அதிரடியாக உள்ளது. இந்த படத்தை பார்த்ததற்கு இன்னொரு காரணமும் உள்ளது.
நான் நடித்து வரும் சைர நரசிம்ம ரெட்டி படமும் சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த ஒரு ராஜாவின் கதை. மணிகர்ணிகா படமும் சுதந்திர போராட்ட கதை என்பதால் இரண்டு படத்தின் கதைக்கும் ஏதாவது ஒற்றுமை உள்ளதா? என்பதை அறிந்து கொள்ளவும் படத்தைப் பார்த்தேன். இரண்டு காட்சிகள் தவிர வேறு எதுவும் ஒற்றுமை இல்லை என்று தெரிவித்துள்ளார்.