வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை | மற்றுமொரு விவசாய படம் | நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி | ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! |
துல்கர் சல்மான், தற்போது மலையாளத்தில் ஒரு யமண்டன் பிரேமகதா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் நவ்பல் என்பவர் இயக்குகிறார். கதாநாயகிகளாக நிகிலா விமல் மற்றும் சம்யுக்தா மேனன் நடிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு துல்கர் சல்மான் மலையாளத்தில் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த படத்தின் கதையை பிரபலமான இரட்டை கதாசிரியர்களான பிபின் ஜார்ஜ் மற்றும் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளதும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இன்னும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு ஆசியாநெட் சேனல் கைப்பற்றியுள்ளது. இது படக்குழுவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.