மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
மலையாள சினிமா நடிகைகளில் உள்ள ஒரு சில தைரியசாலிகளில் நடிகை மம்தா மோகன்தாஸும் ஒருவர். புற்றுநோய்க்கு எதிராக போராடி அதிலிருந்து மீண்டு வந்ததாலோ என்னவோ இந்த எந்த ஒரு விஷயத்திலும் தைரியமாக ரிஸ்க் எடுத்து இறங்கிவிடுகிறார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள மம்தா மோகன்தாஸ் அங்கே ஸ்கை டைவிங் செய்து செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
18,000 அடி உயரத்திலிருந்து குதித்த இவருக்கு தரையைத் தொட 90 விநாடிகள் மட்டுமே ஆனதாம் இந்த ஸ்கை டைவிங் நிகழ்வு முழுவதும் அந்த த்ரில்லிங்கை ரொம்பவே சந்தோஷமாக அனுபவித்ததை அவர், வெளியிட்டுள்ள வீடியோவை பார்க்கும்போது நன்றாகவே தெரிகிறது.
தற்போது ஸ்கை டைவிங் பயிற்சியாளருடன் இணைந்துதான் இந்த சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். விரைவிலேயே தனியாளாக இந்த சாகசத்தை நிகழ்த்த விரும்பும் தனது ஆர்வத்தை வெளியிட்டுள்ளார் மம்தா மோகன்தாஸ்.