ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சினிமாவில் கடந்த ஆண்டு முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான அங்கமாலி டைரீஸ் என்கிற படம் சூப்பர் ஹிட்டானது. அதுமட்டுமல்ல, விமர்சன ரீதியாக பலராலும் பாராட்டப்பட்ட இந்தப்படம், மற்ற மொழி திரையுலக பிரபலங்களையும் கவர்ந்தது. கேரளாவில் உள்ள அங்கமாலி எங்கே நகரத்தை பற்றியும், அங்குள்ள மனிதர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் பற்றியும் இந்த படம் அழகாக விவரித்து இருந்தது.
இந்நிலையில், தெலுங்கில் 'பலக்னுமா தாஸ்' என்கிற பெயரில் இந்தப்படத்தை ரீமேக் செய்து இயக்கி வருகிறார், தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகரான விஷ்வக் சென். அதுமட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகனாகவும் அவரே நடிக்கிறார். கேரளாவில் அங்கமாலியை போல, இந்த படம் ஐதராபாத்தில் உள்ள 'பலக்னுமா என்கிற நகரை மையப்படுத்தி உருவாகி வருகிறது.