சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
இந்த ஆண்டு மம்முட்டி நடிப்பில் 5 படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இவற்றில் சொல்லிக் கொள்ளும்படியாக வெற்றி பெற்றது என்னவோ, ஒரே ஒரு படம் தான். இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான ஸ்ட்ரீட்லைட்ஸ் படம், தமிழ், மலையாளம் என இரு மொழிப்படமாக தயாரானாலும் மலையாளத்தில் மட்டுமே வெளியானது மோசமான திரைக்கதை இந்த படத்தை படத்தின் வெற்றியை பாதித்தது.
அதன்பிறகு வெளியான 'பரோல்' மம்முட்டியின் முந்தைய 'முன்னறிவிப்பு' என்கிற படத்தை போல் எதிர்பார்க்கப்பட்டு, ஆனால் ஏமாற்றத்தையே கொடுத்தது. இடையில் வெளியான 'அங்கிள்' படம் அதன் வித்தியாசமான கதையாக்கத்திற்காக ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றது. பின்னர் வெளியான 'ஆபிரகாமிண்டே சந்ததிகள்' படம் இந்த வருடத்தில் மம்முட்டியின் ஒரே ஒரு வெற்றிப்படமாக அமைந்ததே தவிர, சூப்பர் ஹிட் படம் என்கிற பட்டியலில் இடம் பிடிக்கவில்லை
கடைசியாக வெளியான 'ஒரு குட்டநாடன் பிளாக்' படமும் பத்தோடு பதினொன்றாக வந்த வேகத்திலேயே திரும்பியது. வரும் 2019ல் தான், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற, பல சர்வதேச விருதுகளை பெற்ற மம்முட்டியின் பேரன்பு படம் வெளியாக இருக்கிறது. இன்னும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் மதுரராஜா, மாமாங்கம், பதினெட்டாம்படி ஆகிய படங்கள் அடுத்த வருடம் வெளியாகி மம்முட்டிக்கு நல்ல அறுவடையை கொடுக்கும் என உறுதியாக நம்பலாம்.