ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் |
மலையாள திரையுலகில் மேஜர் ரவி டைரக்சனில் உருவாகும் படங்கள் அனைத்துமே ராணுவத்தை மையமாக வைத்து உருவாகும் அதிரடிப் படங்கள் தான். ராணுவ பின்னணி சார்ந்த படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டான இவர் இயக்கிய 'கீர்த்தி சக்ரா', 'குருசேத்ரா', 'காந்தகார்' பிக்கெட்-43', என ஒவ்வொரு படமும் ஒவ்வொருவிதமான ராணுவ பிரச்சனையை வெளிப்படுத்தியவைதான்.
படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், ஏதோ ஒரு சிறிய கேரக்டரில் அவ்வப்போது தலைகாட்டி செல்வதும் மேஜர் ரவியின் வழக்கம். தற்போது 'பப்பு' என்கிற படத்தில் படம் முழுவதும் ஒரு கேரக்டரில் மேஜர் ரவி நடித்துள்ளார். இதில் அவருக்கு கான்ஸ்டபிள் வேடம். இதில் கதாநாயகனாக நடிக்கும் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷுக்கு தந்தையாக நடிக்கிறார் மேஜர் ரவி.