மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்திய சினிமாவில் சண்டைபயிற்சியாளர்களில் முக்கியமானவர் பீட்டர் ஹெய்ன். தமிழ், தெலுங்கு என கொடிகட்டி பறந்த இவர், சமீபகாலமாக மலையாள திரையுலகிலேயே ஐக்கியமாகி விட்டாரோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது.. ஆம்.. அடுத்தடுத்து வரிசையாக மலையாளத்தில் முன்னணி நடிகர்களின் பிரமாண்ட பட்ஜெட் படங்களுக்கு சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றி வருகிறார் பீட்டர் ஹெய்ன்
மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தின் பிரமிப்பூட்டும் சண்டைக்காட்சிகளை பார்த்துவிட்டு, மலையாளத்தில் அடுத்தடுத்து நான்கு படங்கள் இவரை தேடிவந்தன. அதில், மோகன்லால் நடிப்பில் டிச-14ல் வெளியாக உள்ள 'ஒடியன்' படத்தில் மிரட்டலான சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளாராம் பீட்டர் ஹெய்ன்.
அதை தொடர்ந்து மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்து வரும் 'இருபத்தியொன்னாம் நூற்றாண்டு' படத்தின் சண்டைகாட்சிகளை முடித்துவிட்டு, மம்முட்டி நடிக்கும் மதுர ராஜா படத்தில் பணியாற்றி வருகிறார். இதையடுத்து, திலீப்-அர்ஜுன் இணைந்து நடிக்கவுள்ள 'ஜாக் டேனியல்' ஆகிய படங்களில் பணியாற்ற உள்ளார்.