ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒடியன்' படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் டிச-14ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன்களை விதம் விதமாக நடத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக ஒடியன் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் மோகன்லாலின் உருவம் பொறித்த டி ஷர்ட்டுகள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்த டி ஷர்ட்டுகள் இளைஞர்களை ரொம்பவே கவர்ந்துள்ளன. குறிப்பாக கல்லூரி மாணவிகள் இந்த ஒடியன் டி ஷர்ட்டை விரும்பி அணிவதை பார்க்க முடிகிறது. அறிமுக இயக்குனர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் வில்லனாக பிரகாஷ் ராஜ் நடிக்க முக்கியவேடத்தில் நரேன் மஞ்சு வாரியர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.