பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் மலையாளத்தில் நிவின்பாலி மோகன்லால் இருவரும் இணைந்து நடித்த 'காயங்குளம் கொச்சுன்னி' படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தப்படம் நூறு கோடியையும் தாண்டி வசூலித்தது.
இந்தப்படத்தில் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கொள்ளையனின் கதையை அந்த காலகட்டத்தை நினைவூட்டும் விதமாக அழகாக படமாக்கியிருந்தார்கள். ரசிகர்களை மிகவும் ஆச்சர்யப்படுத்திய அந்த காட்சிகளை எப்படி படமாக்கினோம் என தற்போது ஒரு மேக்கிங் வீடியோவையும் உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். மோகன்லால் இந்த வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.