பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மலையாள சினிமாவில் ராசியான ஜோடியாக திகழ்பவர்கள் திலீப் - மம்தா மோகன்தாஸ் ஜோடி தான். இவர்கள் இருவரும் ஏற்கனவே 'பாசஞ்சர்', 'மை பாஸ்', அரைக், 2 கண்ட்ரீஸ் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். திலீப், தற்போது நடித்து வரும் 'கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல்' படத்திலும் திலீப்பிற்கு ஜோடியாக மீண்டும் மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்.
மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இந்தப்படத்தை இயக்க, இன்னொரு கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்க உள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் தனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார் மம்தா மோகன்தாஸ். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மம்தா மோகன்தாஸின் அம்மா, நாயகன் திலீப், காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சாராமுடு ஆகியோர் கலந்துகொண்டார்.