‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கேரள விஜய் ரசிகர்கள் விஜய்யின் ஒவ்வொரு பட ரிலீஸையும் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். சமீபத்தில் கேரளாவில் சர்கார் பட ரிலீஸை வரவேற்கும் விதமாக திருவனந்தபுரத்தில் 175 அடி உயர கட் அவுட் ஒன்றை வைத்து மிகப்பெரிய சாதனையை முதல் ஆளாக நிகழ்த்தி இருக்கிறார்கள்.
இது தற்போது அங்கேயுள்ள மோகன்லால், மம்முட்டி ரசிகர்களின் ஈகோவை தூண்டிவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக வெளியாகவிருக்கும் மோகன்லாலின் 'ஒடியன்' பட ரிலீஸ் நேரத்தில் மோகன்லாலுக்கு சுமார் 2௦௦ அடியில் கட் அவுட் வைக்கப்போவதாக மோகன்லால் ரசிகர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.
மம்முட்டி ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன..? மம்முட்டி நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாக்கி வரும் 'மதுர ராஜா' பட ரிலீஸ் சமயத்தில் சுமார் 220 அடி உயரமுள்ள கட் அவுட் ஒன்றை வைத்து மற்றவர்களின் சாதனையை தகர்க்க போகிறார்களாம்.