மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கடந்த இரண்டு ஆண்டுகளில் மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க ஹீரோவாக உயர்ந்திருப்பவர் நடிகர் டொவினோ தாமஸ். ஹீரோவின் நண்பனாக, பின்னர் சாதாரண கதைகளில் ஹீரோவாக, அடுத்து கதையை சுமக்கும் கதை நாயகனாக, கடந்த சில மாதங்களாக ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்த இவர், தற்போது ஆக்சன் ஹீரோவாக உருமாறி இருக்கிறார். அதற்கு அவருக்கு கைகொடுக்கும் விதமாக இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன..
ஒன்று அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் 'கல்கி'. இன்னொன்று கோபக்கார கிராமத்து இளைஞனாக அவர் நடித்து வரும் 'ஒரு குப்ரசிதா பையன்'. இந்தப்படத்தில் முதன்முதலாக அதிரடி சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார் டொவினோ தாமஸ். சமீபத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் வரும் நவ-29ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.
தனுஷின் மாரி-2 படத்தில் இவர்தான் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.