இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் ராம்சரண், சமந்தா இணைந்து நடித்த ரங்கஸ்தலம் படம் வெளியானது. சுகுமார் இயக்கியிருந்த இந்தப்படம், சூப்பர்ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பிலும் இடம்பிடித்தது. குறிப்பாக இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் இந்தப்படம் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு கேரளாவில் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜுனுக்கு மட்டுமே கேரள ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கிறது. மற்றபடி இதற்குமுன் ராம்சரண் நடித்த 'மகதீரா' படம் கேரளாவில் அவருக்கு ஓரளவுக்கு அறிமுகம் கொடுத்துள்ளதால் அந்த தைரியத்தில் ரங்கஸ்தலம் படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.