இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'அரவிந்த சமேதா' தெலுங்குப் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. த்ரிவிக்ரம் இதற்கு முன் இயக்கிய 'அஞ்ஞாதவாசி' படம் தோல்வியைத் தழுவிய நிலையில் 'அரவிந்த சமேதா' எப்படி வசூலிக்கும் என்ற சந்தேகம் டோலிவுட்டில் இருந்தது. அனைவரது சந்தேகங்களையும் தீர்த்து இந்தப் படம் முதல் நாளில் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் முதல் நாள் வசூலாக சுமார் 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் 10 லட்சம் யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளது. 'பாகுபலி 2' படம் அல்லாத வசூல் சாதனையில் 'அரவிந்த சமேதா' புதிய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
சுமார் 90 கோடி ரூபாய் அளவிற்கு உலகம் முழுவதும் வியாபாரம் செய்யப்பட்டுள்ள இந்தப் படம் 150 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான தெலுங்கு மசாலாப் படமாக இருந்தாலும், ஜூனியர் என்டிஆரின் ஆக்ஷ்ன் நடிப்பால் இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது என்கிறார்கள்.