மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்கி முடித்தபின் இயக்குனர் சித்திக் மோகன்லால் படத்தை இயக்குவார் என பேச்சளவில் சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாகவே தங்கள் கூட்டணியை அறிவித்துவிட்டார் மோகன்லால். படத்திற்கு 'பிக் பிரதர்' என டைட்டில் வைத்துள்ளார்கள்...
இத்தனை வருடங்களில் மோகன்லாலை வைத்து வியட்நாம் காலனி மற்றும் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் என இரண்டே படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் சித்திக். தற்போது ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லால் படத்தை இயக்கவுள்ளார்.. ஆக்சனுடன் காமெடியும் கலந்த படமாக இது உருவாக இருக்கிறதாம்..
மம்முட்டியை வைத்தே பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ள சித்திக், மோகன்லாலுக்கு அந்த அளவு நிறைய படங்கள் கொடுக்கவில்லை என்கிற மோகன்லால் ரசிகர்களின் மனக்குறையை இந்தப்படத்தில் சித்திக் தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கலாம்.