இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மோகன்லாலை வைத்து 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் பிரியதர்ஷன் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். கேரளாவில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'குஞ்சாலி மரைக்கார்' என்கிற கடற்படை தலைவன் கேரக்டரில் மோகன்லால் நடிக்கவுள்ளார்.
இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இன்னும் சில மற்ற மொழி பிரபலங்களும் நடிப்பார்கள் என சொல்லப்பட்டு வந்தது. தமிழில் இருந்து பிரபு நடிக்கிறார். குறிப்பாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் பெயரும் இதில் அடிபட்டது. தற்போது ஒரு பேட்டியின்போது இந்தப்படத்தில் நடிப்பதை சுனில் ஷெட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரியதர்ஷன் இந்தியில் தொடர்ந்து படங்களை இயக்கியபோது அவருக்கு ஆதரவு கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் சுனில் ஷெட்டி. அதுமட்டுமல்ல, ஏற்கனவே பிரியதர்ஷன் டைரக்சனில் காக்கா குயில் என்கிற மலையாளப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் சுனில் ஷெட்டி.