ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படம் யாத்ரா, என்ற பெயரில் தயாராகி வருகிறது. மகி வி.ராகவ் இயக்கும் இந்த படத்தில் ஒய்.எஸ்.ஆர் வேடத்தில், மலையாள நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். கே இசையமைக்கிறார்.
இந்த படத்தின் டீசர் ஒய்.எஸ்.ஆரின் பிறந்த நாளான ஜூலை 11-ந்தேதி வெளியிடப்பட்ட நிலையில், யாத்ரா படத்தை ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளான டிசம்பர் 21-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த பாத யாத்திரை இந்த படத்தின் கதையில் பிரதானமாகியிருக்கிறது. அதோடு, இந்த படத்திற்காக தெலுங்கில் டப்பிங் பேசும் மம்முட்டி, டீசரிலும் தானே டப்பிங் பேசி தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.