‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தை தழுவி எழுதிய ரண்டமூழம் நாவல், ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான படமாக உருவாக இருப்பதற்காக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது.. மோகன்லால் பீமனாக நடிக்கவுள்ள இந்தப்படத்தை பிரபல விளம்பரப்பப்பட்ட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ளார்.. இவர்தான் தற்போது மோகன்லாலை வைத்து ஒடியன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.. இந்தப்படத்தின் பெஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதனால் மகாபாரதம் படம் டைட்டில் அறிவிப்போடு அப்படிய கிடப்பில் போடப்பட்டதாக பேச்சு எழுந்தது.. ஆனால் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் ஸ்ரீகுமார் மேனனும் மகாபாரதம் படத்தை தயாரிக்கவுள்ள டாக்டர் பி.ஆர்.ஷெட்டியும் சிகாகோ பயணம் மேற்கொண்டு அங்குள்ள உலக ஹிந்து கூட்டமைப்பை சந்தித்து படம் தொடர்பாக நிறைய விஷயங்களை பேசி வந்துள்ளார்கள்.
படத்தின் முன் கட்ட தயாரிப்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவுறும் தறுவாயில் இருக்கிறதாம். இதுகுறித்து குறிப்பிட்டுள்ள ஸ்ரீகுமார் மேனன் மகாபாரதம் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் விரைவில் வெளியாகும் என ரசிகர்களை உற்சாகப்படுத்தியுளார்.