ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் திரையுலகில் பிரியா ஆனந்தின் சீசன் முடிந்துவிட்டது என்றாலும் ஒருகதவு அடைத்தால் இன்னொரு கதவு திறக்கும் என்பது போல மலையாள திரையுலகம் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. கடந்த வருடம் பிருத்விராஜுடன் எஸ்ரா என்கிற ஹாரர் படத்தில் நடித்தார் ப்ரியா ஆனந்த். அதன்பின் அவரே எதிர்பாராத விதமாக நிவின்பாலி, மோகன்லால் இணைந்து நடித்துள்ள காயம்குளம் கொச்சுன்னியில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது.
அந்தப்படத்தை முடித்துவிட்ட நிலையில், அடுத்ததாக தற்போது திலீப் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா ஆனந்த். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கும் இந்தப்படத்தில் மம்தா மோகன்தாஸ் இன்னொரு நாயகியாக நடிக்கவுள்ளார். ஒரே ஷெட்யூலில் இந்தப்படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.