ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இன்று தனது 67வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்தார் நடிகர் மம்முட்டி. மலையாள சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே 66 வயதாகியும் கூட மேக்கப் போடமாலேயே இன்றும் இளமையுடன், அன்று பார்த்த அதே தோற்றத்துடன் இருப்பவர் மம்முட்டி ஒருவரே..
அதுமட்டுமல்ல, பொதுவாக தங்களது வாரிசுகள் நடிக்க வந்துவிட்டால் தந்தை நடிகர்கள் ஓய்வு பெறுவது அல்லது அப்பா கேரக்டர்களில் நடிக்கப்போய் விடுவதுதான் வாடிக்கை. ஆனால் மம்முட்டியின் விஷயத்தில் அதுவும் தலைகீழ். இன்று அவரது மகன் துல்கர் சல்மான் இளம் முன்னணி நடிகராக மாறிவிட்ட பின்னரும் கூட அவருக்கு போட்டியாக அவரை உட மிக உயரமான இடத்திலேதான் மம்முட்டி இருக்கிறார்.
இந்த நாற்பதாண்டு கால சினிமா வாழ்க்கையில் மம்முட்டி ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். புதிய இயக்குனர்கள் சினிமாவிற்குள் வர ஆதரவுக்கரம் நீட்டுவதோடு, தன்னை வைத்து படம் இயக்கி, தற்போது ரேஸில் பின்தங்கிவிட்ட சீனியர் இயக்குனர்களையும் மறவாமல் மீண்டும் அழைத்து படம் தருவதிலும் மம்முட்டிக்கு நிகர் அவரே தான்.
தற்போதும் 5 பிரமாண்டமான படங்களை நடித்து பிஸியாக வலம் வரும் மம்முட்டிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.