'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
சமீபத்தில் கேரளாவை உலுக்கிய மழை வெள்ளத்திற்கு முன்பாக சில மாதங்களுக்கு முன்னர் நிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தியதையும் பல உயிர்களை காவு வாங்கியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தற்போது வைரஸ் என்கிற படம் உருவாகிறது.
சமீபத்தில் வெளியாகி ஹிட்டான மாயநதி படத்தை இயக்கிய இயக்குனர் ஆசிக் அபு இயக்குகிறார். மாய நதியில் ஹீரோவாக நடித்த டொவினோ தாமஸ் தான் இதிலும் ஹீரோவாக நடிக்கிறார்.
இவர் தவிர காளிதாஸ் ஜெயராம், ஆசிப் அலி இன்னும் இரண்டு ஹீரோக்களும் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக பார்வதி, ரம்யா நம்பீசன் நடிக்க முக்கிய வேடங்களில் ரேவதி, செம்பான் வினோத், இயக்குனர் திலீஷ் போத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். டொவினோ தாமஸும் பார்வதியும் இதற்கு முன் என்னு நிண்டே மொய்தீன் படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.