நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம் | இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் |
நாக சைதன்யா-சமந்தா இருவரும் ஆட்டோ நகர் சூர்யா என்ற படத்தில் நடித்தபோது காதலித்து அதன்பிறகு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆக, தமிழ்நாட்டு பெண்ணான சமந்தா தற்போது ஆந்திர மருமகளாகி விட்டார்.
மேலும், திருமணத்திற்கு பிறகும் வழக்கம்போல் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தா, நடித்து இந்த ஆண்டு வெளியான அனைத்து படங்களுமே வெற்றி பெற்று வந்துள்ள நிலையில், செப்டம்பர் 13-ந்தேதி அவர் நாயகியாக நடித்துள்ள சீமராஜா, யுடர்ன் என்ற இரண்டு படங்களும் வெளியாகிறது.
முக்கியமாக, தெலுங்கில் யுடர்ன் வெளியாகும் அதே நாளில் சமந்தாவின் கணவரான நாகசைதன்யா நடித்துள்ள சைலஜா ரெட்டி அல்லுடு என்ற படமும் வெளியாகிறது. நாகசைதன்யா படம் வெளியாகும் அதேநாளில் தனது படத்தை வெளியிட வேண்டாம் என்று முன்பே யுடர்ன் டைரக்டர் பவன் கல்யாணிடம் கேட்டுக்கொண்டார் சமந்தா.
ஆனால், தமிழில் வெளியாகும் அதேநாளில் வெளியிட்டால் தான் சரியாக இருக்கும் என்று தயாரிப்பு தரப்பு சமந்தாவை கேட்டுக்கொண்டதை அடுத்து, செப்டம்பர் 13-ந்தேதி தெலுங்கில் நாகசைதன்யாவின் சைலஜா ரெட்டி அல்லுடு படம் வெளியாகும் அதே நாளில் சமந்தாவின் யுடர்ன் படமும் வெளியாகிறது.
ஆக, ஒரே நாளில் கணவன்-மனைவி இருவரும் நடித்த படங்கள் எதிரும் புதிருமாக போட்டிக்கோதாவில் இறங்குகின்றன. அந்த வகையில், வசூல்ரீதியாக யார் யாரை முந்தப்போகிறார்கள் என்று அறிய தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் ஆவலுடன் காத்திருக்கிறது.