ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த 2016-ல் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் எந்தப்படமும் ரிலீஸ் செய்யாமல் இருந்த மோகன்லால், கடந்த வருடம் மூன்று மாதத்திற்கு ஒரு படம் என ரிலீஸ் செய்தார். இந்தவருடம் இன்னும் அவரது படம் ஒன்று கூட ரிலீஸாகவில்லை என்றாலும் இந்த ஜூலை (13)யில் இருந்து ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு படம் என மோகன்லால் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன.
புதியவரான பாலிவுட் இயக்குனர் அஜய் வர்மா இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள நீராளி வரும் ஜூலை-13ல் வெளியாக இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள டிராமா ஆகஸ்ட்டிலும், நிவின்பாலியுடன் இணைந்து நடித்துள்ள காயம்குளம் கொச்சுன்னி படம் செப்டம்பரில் வெளியாக இருக்கின்றன. இந்த மூன்று படங்களுக்கும் முன்னதாக மோகன்லால் நடிக்க ஆரம்பித்த ஒடியன் படம் அக்டோபரில் தான் வெளியாகிறது.