ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் விவேக் ஓபராய் பாலிவுட்டில் ராம்கோபால் வர்மா டைரக்சனில் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமான படம் 'கம்பெனி'. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் மோகன்லாலும் நடித்திருந்தார். அவருக்கும் ஹிந்தியில் அதுதான் முதல்படம். தற்போது 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். அதுவும் மலையாள படத்தில்.
நடிகர் பிருத்விராஜ் முதன்முதலாக, மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் லூசிபர் என்கிற படத்தை இயக்குவதன் மூலம் டைரக்சனில் அடியெடுத்து வைக்கிறார் அல்லவா..? அந்தப்படத்தில் தான் விவேக் ஓபராய் நடிக்கவுள்ளார். இதுவரை பேச்சுவார்த்தையில் இருந்துவந்த இந்த விஷயத்தை தற்போது, படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் ஒப்பந்தம் மூலம் உறுதி செய்துள்ளார்.
இந்தப்படத்தில் வலுவான ஸ்டைலிஷான வில்லன் கதாபாத்திரம் ஒன்று இருக்கிறதாம். மலையாள திரையுலகிற்கு புதிதான ஒரு நபரை வில்லன் கேரக்டரில் நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குனர் பிருத்விராஜ், விவேக் ஓபராயிடம் பேசி சம்மதிக்க வைத்தாராம்.