இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ராம் கோபால் வர்மா, நாகர்ஜூனாவை வைத்து இயக்கிய ஆபீசர் படம் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையின் தனது அடுத்த படத்தில் நாகார்ஜுனா மகன் அகில் அக்கினேனி நடிக்கிறார். இதனை நாகார்ஜூனாவே தயாரிக்கிறார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருந்தார் ராம்கோபால் வர்மா.
இதைப்பார்த்த நாகார்ஜுனா ரசிகர்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். தோல்வி படம் கொடுத்தவருடன் இன்னொரு படமா என்று கோபம் அடைந்தார்கள். "அப்பாவை கெடுத்தது போதாதென்று மகனையும் கெடுக்கப் போகிறீர்களா?" என்று ராம்கோபல் வர்மா மீதும் பாய்ந்தனர்.
இந்த நிலையில் அகில் தனது டுவிட்டரில், தான் ராம்கோபால் வர்மா படத்தில் நடிக்கவில்லை. அதற்கான எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. நான் வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்போது நெட்டிசன்கள் ராம்கோபால் வர்மாவை கலாய்த்து எடுத்து வருகிறார்கள்.