இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கேரளாவை பொறுத்தவரை அங்கு வெளியாகும் படங்களுக்கு ஜி.எஸ்.டி வரியை தவிர வேறெந்த வரிகளையும் விதிக்கவில்லை. இந்தநிலையில் கேரளாவில் வெளியாகும் மற்ற மொழி திரைப்படங்களுக்கு மாநில கேளிக்கை வரி என தனியாக விதிக்க முடிவு செய்துள்ளதாக கேரள நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு வரிவிதிப்பு முறையை பின்பற்ற விரும்புவதாக கூறியுள்ள அமைச்சர், இந்த வரியானது 10 - 15 சதவீதம் வரை விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். கேளிக்கை வரி மூலம் மாநில அரசின் வருமானத்தை உயர்த்துவதற்காகவே இந்த வரிவிதிப்பு நடவடிக்கை என சொல்லப்படுகிறது. அதேசமயம் மலையாள மொழி படங்களுக்கு இந்த உள்ளூர் கேளிக்கை வரி விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.