ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசியம் செய்த 'பெங்களூர் டேய்ஸ்' படம் வெளியாகி கடந்த மே மாதத்துடன் நான்கு வருடங்கள் முடிந்து விட்டன. வெள்ளி விழா கொண்டாடிய படம், வசூலை வாரிகுவித்த படம் என பல சாதனைகளுக்கு சொந்தமான அந்தப்படத்தை இயக்கிய அஞ்சலி மேனனோ தனது அடுத்த படத்தையே இந்த வருட ஆரம்பத்தில் துவக்கினார்..
இந்தப்படத்திலும் கதாநாயகிகளாக நஸ்ரியா, பார்வதி இருவரும் உண்டு. கதாநாயகன் பிருத்விராஜ். இந்தப்படம் மராத்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஹேப்பி ஜர்னி படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக்காக உருவாகி இருக்கிறது. மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்ட அஞ்சலி மேனன், தற்போது படத்திற்கு கூடே என டைட்டிலை வைத்து போஸ்டரை வெளியிட்டுள்ளார்..