ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக நடித்து வந்த சீனியர் நடிகர் கலாசால பாபு என்பவர் நேற்றிரவு காலமானார். 63 வயதான இவர் சமீப நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. சுமார் நாற்பது வருடங்களாக மலையாள சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல டிவி சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வந்த இவர் நாடகங்களில் நடிப்பதையும் தொடர்ந்து வந்தார். ஆரம்பத்தில் நாடக குழுக்களில் பங்கேற்று நடித்து வந்த இவர், தனியாக கலாசால என்கிற நாடக அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார்.. அதனாலேயே இவரது பெயர் கலாசால பாபு என மாறியது.