தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள திரையுலகை பொறுத்தவரை அரசியலில் சினிமாக்காரர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டாததால், சினிமா வளர்வதற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தர கேரள அரசு தயக்கம் காட்டுவதில்லை.. அந்தவிதமாக கேரளா முழுதும் முக்கிய நகரங்களில் நூறு தியேட்டர்களை கட்டுவதற்கு கேரள திரைப்பட வளர்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது..
இதற்கான துவக்கவிழா கேரளாவில் ஒட்டப்பாலத்தில் நடைபெற்றது.. இதற்காக சுமார் 15௦ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாம். மேலும் முதல்கட்டமாக முப்பது தியேட்டர்களை நவீனப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாம்..
இந்த நூறு தியேட்டர்கள் தவிர, தங்கள் பகுதியிலும் தியேட்டர்கள் வர விரும்புவர்கள் அதற்கான நிலம் கையகப்படுத்த ஏற்பாடு செய்து தர முன்வந்தால் அங்கேயும் தியேட்டர்கள் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள். திரைப்பட இயக்குனரும் கேரள திரைப்பட வளர்ச்சி கழகத்தின் சேர்மனுமான லெனின் ராஜேந்திரன் இந்த திட்டங்களை முழு முனைப்புடன் முன்னெடுத்து வருகிறார்.