பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
ஸ்பைடர் படத்தின் தோல்வியால் துவண்டு கிடந்த மகேஷ் பாபுவிற்கு, பரத் அனி நேனு உற்சாக டானிக்காக அமைந்து விட்டது. கடந்த 20ந் தேதி வெளியான படம் ஒரு வாரத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டும் என்று கணித்திருக்கிறார்கள்.
இது ஒரு இளம் அரசியல்வாதியின் கதை. இளைஞன் ஒருவன் மாநில முதல்வராக வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதை.
மகேஷ் பாபுவுடன் கியரா அத்வானி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், தேவராஜ், சித்தாரா, உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கொரட்லா சிவா இயக்கிய இருக்கிறார், ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், தேவி ஸ்ரீபிரசாத் இயக்கி இருக்கிறார். டிவிவி நிறுவனத்தின் சார்பி தனன்யாக தயாரித்திருக்கிறார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் படத்தை ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவுகிறது.
படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள் என்கிற செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது படத்தை ஹிந்தியில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதேப்போல தமிழில் ரீமேக் செய்ய யாரும் முன்வராவிட்டால் தமிழிலும் டப் செய்து வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.