ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவை பொறுத்தவரை இன்னும் ஒரு ஸ்திரமான இடத்தை பிடிக்காமலேயே ஒரு ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் உன்னிமுகுந்தன். ஆனால் மாதத்திற்கு ஒன்று என இவர் நடிக்கும் படம் தவறாமல் வெளியாகி விடுகிறது. டிசம்பரில் 'மாஸ்டர்பீஸ்', ஜனவரியில் 'பாகமதி', மார்ச்சில் 'இறா' ஆகிய படங்கள் இவர் நடிப்பில் ரிலீசாகின.
இதையடுத்து தற்போது இவர் நடித்துள்ள 'சாணக்ய தந்திரம்' படம் வரும் ஏப்-27-ல் ரிலீசாக இருக்கிறது. இதில் பலவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் உன்னி முகுந்தன். அதில் பெண் வேடமும், சாமியார் வேடமும் அடங்கும். சமீபத்தில் சாணக்ய தந்திரம் படத்தில் பெண் வேடமிட்ட இவரது போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்தப்படத்தில் கதாநாயகியாக ஷிவதா நாயர் நடித்திருக்கிறார்.