மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். ஸ்டைலிஷ் ஹீரோ என்று அழைக்கப்பட்டு வரும் அல்லு அர்ஜூன் நடித்துள்ள நா பேரு சூர்யா என்ற படம் மே 4-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், ஏப்ரல் 8-ந்தேதி அல்லு அர்ஜூனின் பிறந்த நாள் ஆகும். தனது பிறந்தநாளை எப்போதுமே குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே கொண்டாடி வந்த அவர், இந்த ஆண்டு பிறந்த நாளை ஊடகங்கள் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களும் தனது நண்பர்களுமான பிரபாஸ், மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர்., ஆகியோருடன் கொண்டாடியிருக்கிறார்.
அதோடு, ஏப்ரல் 7-ந்தேதி மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு படத்தின் ஆடியோ விழா நடைபெறயிருந்ததால் ஏப்ரல் 6-ந்தேதியே இந்த பார்ட்டியை நடத்தியுள்ளார் அல்லு அர்ஜூன்.