ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பொதுவாக ரஜினி படம் ரிலீசாகும்போது கேரளாவில் மலையாள படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய மாட்டார்கள்.. முக்கால்வாசி தியேட்டர்களை ரஜினி படத்திற்கே ஒதுக்கி விடுவார்கள். அந்தவகையில் இந்த வருடமும் ரஜினியின் 'காலா' படம் வரும் ஏப்-27ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் தமிழ் திரையுலகில் நடைபெற்று வரும் ஸ்டிரைக் காரணமாகவும், ஸ்டிரைக் முடிவுக்கு வந்தாலும் கூட சீனியாரிட்டி அடிப்படையில் 'காலா' ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்றே சொல்லப்படுகிறது. அதனால் மலையாள திரையுலகில் சில படங்கள் ஏப்-27ஆம் தேதியை தங்களது ரிலீசுக்காக துண்டுபோட்டு வைக்க ஆரம்பித்துவிட்டன.
அதில் மலையாளத்தில் வினீத் சீனிவாசன் நடித்துள்ள 'அரவிந்தண்டே அதிதிகள்' படக்குழு ஏப்-27ஆம் தேதி தங்கள் படம் ரிலீஸ் என உறுதியாக அறிவித்துவிட்டது. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நிகிலா விமல். தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் இன்னும் சில படங்களும் போட்டியில் குதிக்கலாம் என தெரிகிறது.