பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஐஎஸ்எல் வரலாற்றில் அதிக கோல்களை அடித்தவர் என்ற பெருமை கொண்டவர் தான் கனடாவை சேர்ந்த கால்பந்து வீரரான லெய்ன் ஹ்யூம். தற்போது இந்தியன் சூப்பர்லீக் சீசன் 4ல் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் பங்குபெற்று விளையாடி வருகிறார்.
கேரள கால்பந்து ரசிகர்கள் இவரை செல்லமாக ஹ்யூமேட்டன்' என்று அழைக்கிறார்கள். இவரது நீண்டநாள் ஆசை மோகன்லாலை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்பது தான். தற்போது மோகன்லாலை அவர் நடித்துவரும் 'ஒடியன்' படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சந்தித்துள்ளார்
“சில வருட முயற்சிக்கு பிறகு ஒரு வழியாக உங்களை சந்தித்து விட்டேன் லாலேட்டன்.. நன்றி” என தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.