'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பிற மொழிகளில் வெற்றி பெறும் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து ஹிட்டடிப்பதில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷை மிஞ்ச ஆள் இல்லை. 'சந்திரமுகி', 'பாடிகார்டு', 'த்ரிஷ்யம்' ஆகிய படங்கள் எல்லாம் இவர் புண்ணியத்தில் தான் ரீமேக்காகி தெலுங்கு பேசின. ஹிட்டும் அடித்தன. அதைத்தொடர்ந்து, மம்முட்டி நடிப்பில் ஹிட்டான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை ரீமேக் செய்து நடிக்க நினைத்தார்.
ஆனால், அதை இயக்குனர் சித்திக்கே இயக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் சித்திக்கோ, அரவிந்தசாமியை வைத்து அந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஆரம்பித்துவிட்டதால் அந்த திட்ட்டத்தை ஒத்தி வைத்தார் வெங்கடேஷ்.
தற்போது மம்முட்டியின் இன்னொரு ஹிட் படமான 'தி கிரேட் பாதர்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க இருக்கிறாராம் வெங்கடேஷ். மலையாளத்தில் ஆர்யா நடித்த ரோலில், தமிழில் இருந்து இளம் நடிகர் ஒருவரை நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக சொலப்படுகிறது.