தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராம்சரண் - சமந்தா நடித்துள்ள படம் ரங்கஸ்தலம். 80-களில் நடக்கும் கிராமத்து கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. ராம் சரண், சமந்தா இருவரும் பக்கா கிராமத்து கெட்டப்பில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட டீசர், போட்டோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். நாளை பிப்ரவரி 14 காதலர் தினம் என்பதால், ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 13-ந்தேதியான இன்று மாலை ரங்கஸ்தலம் படத்தின் ஒரு காதல் பாடலின் ஆடியோவை இணையதளத்தில் வெளியிடுகிறார்கள். கதைப்படி, சிட்டி பாபுவாக நடித்துள்ள ராம்சரணின் கேரக்டர் பற்றியும், ராமலட்சுமியாக நடித்துள்ள சமந்தாவின் கேரக்டரையும் வர்ணித்து எழுதப்பட்டுள்ள இந்த பாடல், எந்தா சக்ககுன்னவே -என்ற வார்த்தையில் தொடங்குகிறது.