ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் பிருத்விராஜ் முதன்முதலாக மோகன்லால் நடிக்கும் 'லூசிபர்' படத்தை இயக்குவதன் மூலம் டைரகச்னில் அடியெடுத்து வைக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட செய்தி தான். இந்த வருடம் முழுதும் தொடர்ந்து படிப்பில் பிசியாக இருக்கும் பிருத்விராஜூம் மோகன்லாலும் அடுத்த வருடத்தில் இதன் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்..
இந்தநிலையில் இந்தப்படத்திற்கான நட்சத்திர தேர்வையும் ஒருபக்கம் நடத்தி வருகிறார் பிருத்விராஜ். அந்தவகையில் தன்னுடன் மூன்று படங்களில் இணைந்து நடித்த, தனது நட்பு வட்டாரத்தில் உள்ள இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸிற்கு இந்தப்படத்தில் மிக முக்கிய கேரக்டர் ஒன்றை கொடுத்துள்ளார் பிருத்விராஜ்.
தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் இந்த டொவினோ தாமஸ், தமிழில் 'அபியும் அனுவும்' படத்தில் ஹீரோவாகவும் தனுஷின் 'மாரி-2' படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.