நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
'ஒரு நாள் கூத்து', எமன் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான மலையாள நடிகை மியா ஜார்ஜ் தொடர்ந்து தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தான் நடிக்கவுள்ள ஒரு மலையாள படத்திற்காக மெழுகுவர்த்தி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இரண்டு நாட்கள் பயிற்சி எடுக்க இருக்கிறார் மியா.
இந்தப்படத்தில் அவர் மெழுகுவர்த்தி தயாரிக்கும் நிறுவனம் நடத்துபவராக நடிக்கவுள்ளார். அதற்காகத்தான் இந்த பயிற்சியாம். ஊட்டியில் சுமார் 6௦ நாட்கள் நடைபெறவுள்ள இந்தப்படம் ஒரு முக்கோண காதல் கதையாக உருவாகவுள்ளது. கதாசிரியரும், நடிகருமான அனூப் மேனன் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளதுடன் ஹீரோவாகவும் நடிக்கிறார்.