பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
திரிவிக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாண் நாயகனாக நடித்து ஜனவரி 10-ந்தேதி வெளியாகியுள்ள படம் அஞ்ஞாதவாசி. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் வெங்கடேசும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனால் அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. அதனால் தியேட்டருக்கு வந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதோடு, மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.
அஞ்ஞாதவாசி படத்தில் தேவையற்ற, நீளமான காட்சிகள் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, அஞ்ஞாதவாசி படத்தைப்பற்றி ரசிகர்கள் சொன்ன கருத்துக்களை எடுத்துக்கொண்டு 12 நிமிட காட்சிகளை கத்தரித்துள்ளனர். அதோடு, எடிட் செய்து வைத்திருந்த வெங்கடேஷின் காட்சிகள் அனைத்தும் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ள பதிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் திரையிடப்பட உள்ளதாம்.