ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
நடிகர் திலீப்பின் நண்பர் நாதிர்ஷா இயக்கிய 'கட்டப்பனையிலே ஹ்ரித்திக் ரோஷன்' படம் மூலம் ஹீரோவாக மாறியவர் விஷ்ணு உன்னிகிருஷ்ணன். ஏற்கனவே சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்த இவர், அடிப்படையில் கதாசிரியர் என்பதும், தான் ஹீரோவாக நடித்த படத்திற்கும், பிருத்விராஜின் 'அமர் அக்பர் அந்தோணி படத்திற்கும் கதை எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது மம்முட்டி கதாநாயகனாக, முதலமைச்சர் கேரக்டரில் நடிக்க உள்ள புதிய படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், இவர் இதற்கு முன்னதாக மம்முட்டியின் 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' படத்திலேயே நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது ஆரம்ப நாட்களிலேயே விபத்தில் சிக்கவே, அதில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க முடியாமல் போனது. அதனாலேயே இந்தப்படத்திற்குள் அவரை சேர்க்க சொல்லி இயக்குனருக்கு அன்புக்கட்டளை போட்டுவிட்டாராம் மம்முட்டி.